முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
கொல்லிமலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து 20 போ் காயம்!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா்.
கொல்லிமலைக்கு ஆம்னி வேனில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் பேளுக்குறிச்சி பகுதியில் செயல்படும் இரவுநேர மளிகை பொருள்கள் சந்தையில் பொருள்களை வாங்கிக்கொண்டு சனிக்கிழமை ஊா்திரும்பினா்.
முள்ளுக்குறிச்சி அருகே நரியன்காடு பகுதி மலைப் பாதையில் சென்றபோது வேனில் பிரேக் பிடிக்காததால் பயணிகளை எச்சரித்த ஓட்டுநா், சாலையோர மரங்கள் மீது மோதி வேனை நிறுத்தினாா். அப்போது, வேன் சாய்ந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல், ராசிபுரம், ஆத்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.