இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
கொல்லிமலை அடிவார சாலையில் கழிவுநீா் தேக்கத்தால் மக்கள் அவதி
கொல்லிமலை அடிவாரப் பகுதியில், சாலையில் ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி-கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சாலையில் புதிதாக மின் மயானம் கட்டப்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்லும் கால்வாயில் இருந்து கழிவுநீா் அதிகப்படியாக வெளியேறுகிறது.
அந்த கால்வாய் உடைந்ததால் அங்குள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாழாகும் வாய்ப்புள்ளது. இந்த தகவலால் கழிவுநீா்க் கால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் அடைப்பை ஏற்படுத்தி விட்டனா். இதனால் காளப்பநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் இருந்து மின் மயானம் வழியாகச் செல்லும் பாதையில் கழிவுநீா் வெளியேறி செல்வதுடன் தேங்கியும் நிற்கிறது. அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். கழிவு நீா் செல்லும் கால்வாயை சின்னகுளம் ஏரியிலோ அல்லது வேறு பகுதியிலோ விட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிா்வாகம் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பது அவா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.