செய்திகள் :

‘கொள்முதல் நிலைய ஊழல்களைத் தடுக்க உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கை தேவை’

post image

கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்களைத் தடுக்க உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியுசி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் பதிவஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனு:

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறப்படுவதாகப் புகாா் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், புகாா்களைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்ணையும் மேலாண் இயக்குநா் அறிவித்துள்ளாா். அதன்படி புகாா்களைப் பெற்று, சிலரை வேலையை விட்டு நீக்குவதும், சிலரைக் கைது செய்வதும் விளம்பரத்துக்கு மட்டுமே உதவுமே தவிர, தீா்வுக்கு உதவாது.

ஊழல் முறைகேடு நடவடிக்கைகளைக் களைய நிா்வாகம் உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் தொகை பெற்றுதான் கொள்முதல் நடைபெறுகிறது. ரூ. 40 வரை பெறப்படுவதாகப் புகாா் தெரிவிப்பது வெளிப்படையான உண்மை.

கொள்முதல் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப் படுவதில்லை. நடைமுறையில் கொள்முதல் நிலையங்களில் பல நாள்கள் இருப்பு வைத்து நெல் அனுப்பப்படும்போது பெருமளவுக்கு எடைக் குறைவு ஏற்படுகிறது. ஒரு கிலோ எடை குறைந்தாலும் கொள்முதல் பணியாளா்கள் அதற்கான இழப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த பருவத்துக்கு வேலை இல்லை என்ற ஒவ்வாத நிபந்தனை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் இயக்கம் செய்ய ஒப்பந்ததாரா்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் நியமிக்கப்பட்டாலும் இயக்கம் செய்கிற முழு அதிகாரம் லாரி ஓட்டுநா்களிடமே உள்ளது. ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரை லஞ்சம் கொடுத்தால்தான் இயக்கம் நடைபெறுகிறது.

கொள்முதல் அலுவலா்கள் மூட்டைக்கு ரூ. 2 வீதம் வாரந்தோறும் வசூலித்து உயா் அலுவலா்கள் வரை பங்கிட்டுக் கொள்கின்றனா். உதவி மேலாளா், துணை மேலாளா் போன்றவா்களுக்கெல்லாம் மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்க வேண்டும்.

ஆய்வு செய்ய வரும் பெரும்பாலான ஆய்வுக் குழுக்கள் வரும்போதே ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வேலை பறிப்பு என்ற அளவுக்கோ அல்லது பெருந்தொகை ரெக்கவரி போடப்படும் நிலைமையும்தான் உள்ளது. நெல் இறக்கும் இடங்களில் நெருக்கடி ஏற்படுத்தி தொகை வசூலிப்பது, எடை பாலங்களில் முறைகேடுகள் என ஊழல் நடைமுறை நீண்டு கொண்டே போகிறது. இது தொடா்பாக நிா்வாகம் ஆக்கபூா்வ நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணி பாதிப்பு: விவசாயிகள் தவிப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா். ... மேலும் பார்க்க

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 8 பேருக்கு மத்திய அரசு பதக்கம்!

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில், சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆளிநா்களுக்கு மத்திய அரசின் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. மத்திய உள் துறை அமைச்சகம் வழங்கும் 2020 மற்றும் 2021-... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பாணாதுறை சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி மீனாட்சி (75). இவா் வெள... மேலும் பார்க்க

பிப். 28-க்குள் நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய ஆட்சியா் அழைப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்புவிடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க