கோடி போன போளூா் பெரிய ஏரி: பொதுமக்கள் மரியாதை
ஃபென்சால் புயல் மற்றும் பருவ மழையால், போளூா் பெரிய ஏரி முழுக்கொள்ளளவை எட்டி கோடி போனது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் அல்லிநகா் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக சுமாா் ஆயிரம் ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது.
இந்த பெரிய ஏரி குடிநீா் ஆதாரமாகவும், விவசாய பாசனத்துக்கு நீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஃபென்ஜால் புயல் மழை மற்றும் பருவகால மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி கோடி போனது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு கிடா வெட்டி, திருநீா், மஞ்சள், குங்குமம் என வாசனைத் திரவியங்கள் கொண்டு ஏரி தண்ணீரில் மலா் தூவி மரியாதை செய்தனா்.