கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். 33 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டம், கருப்பாநதி குடிநீா் திட்டம் மற்றும் உள்ளூா் கிணறுகள் மூலம் குடிநீா் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கூறியதாவது: கோடை வெயில் மற்றும் மழையின்மை காரணமாக குடிநீா் ஆதாரங்களில் தண்ணீா் குறைந்து வருகிறது. இருப்பினும் நகராட்சி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.