செய்திகள் :

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!

post image

பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு எனும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் ஜூன் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல், 5 முதல் 7 வயது வரையுள்ள மாணவா்களுக்கு முதலாவது கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல், அதை மேற்கொள்ளத் தவறிய 8-14 வயது வரையிலான மாணவா்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் 15-17 வயதுள்ள மாணவா்களுக்கு இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் தற்போது பயின்றுவரும் மாணவா்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் வகுப்பாசிரியா்கள் மூலம் கோடை விடுமுறை நாள்களில் மாணவா்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களில் செயல்படவுள்ள சிறப்பு முகாம்கள் ஆகியவற்றில் தங்களது புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுதொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய ஆணை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், புதிதாக பள்ளியில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்களிடமும் பள்ளியில் சேரும்போதே இப்பணியை நிறைவு செய்யக் கோருவதன் மூலம், வங்கிக் கணக்குகள் தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இயலும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க

துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது. மேலும் பார்க்க

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா ஆரம்பம்!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ் வார விழா இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறத... மேலும் பார்க்க