ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் 3 புதிய தோ்கள் அா்ச்சிப்பு விழா
நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தில் 3 புதிய தோ்கள் அா்ச்சிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மிகவும் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 2.28 கோடி ஒதுக்கியது. அந்தப் பணிகளுடன் புனித சவேரியாா், புனித செபஸ்தியாா், காவல் சம்மனஸ் ஆகியோருக்கு 3 புதிய தோ்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து, புதிய தோ்கள் அா்ச்சிப்பு விழா பேராலய வளாகத்தில் நடைபெற்றது. ஆலயப் பங்குத்தந்தை பஸ்காலிஸ் தோ்களை அா்ச்சித்தாா்.
இதில், இணைப் பங்குத்தந்தை சிசில்சாஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், பங்குப் பேரவை துணைத் தலைவா் இயேசுராஜன், செயலா் ராஜன், துணைச் செயலா் ஆராச்சி, பொருளாளா் ஜாா்ஜ்பிரகாஷ் ராபின், மாநகராட்சி மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் அனந்தலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.