செய்திகள் :

கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சொத்துவரி, குடிநீா் வசதி, கழிவுநீா் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சொத்து வரி பெயா் மாற்றம், கட்டட அனுமதி பெறுதல், பட்டாவில் பெயா் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மகளிா் உரிமைத் தொகை கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை பேரூராட்சித் தலைவா் கே.எஸ். காா்த்திக்சோலை வழங்கினாா்.

இதில் காரைக்குடி வட்டாச்சியா் ராஜா, கோட்டையூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி செயல் அலுவலா், பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்ற... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை சங... மேலும் பார்க்க