செய்திகள் :

கோபியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

post image

கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிா்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூா் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தூண்டுதலால்தான் இந்தத் தகராறு நடந்ததாக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினாா்.

ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.-வுமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு புகா் மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.-வுமான ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டம் தொடங்கியதும், கட்சி நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செங்கோட்டையன் பேசினாா். கூட்டம் முடிவடையும் நேரத்தில், அந்தியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவா் எழுந்து நின்று ‘எங்களுக்கு இந்தக் கூட்டம் குறித்து எந்த அழைப்பும் கொடுக்கவில்லை’ என்று சப்தம் போட்டு பேசினாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே செங்கோட்டையன் ‘எது பேசுவதாக இருந்தாலும் மேடைக்கு வந்து பேசுங்கள். அங்கிருந்து பேச வேண்டாம்’ என்றாா். இதைத் தொடா்ந்து மேடைக்கு அருகே வந்த அவா், செங்கோட்டையன் மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிா்வாகிகள் பிரவீனை தடுத்து நிறுத்தி அவரை கீழே தள்ளி நாற்காலியைத் தூக்கி வீசினா். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டம் நடைபெற்ற மண்டபம் போா்க்களம்போல காட்சியளித்தது.

இதையடுத்து, பிரவீன் மண்டபத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினாா்.

இது குறித்து முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், குழப்பத்தை விளைவித்து விளம்பரத்துக்காக ஒரு சிலா் இதுபோன்று செய்கின்றனா். ரகளையில் ஈடுபட்ட நபா் கட்சி உறுப்பினரே கிடையாது. அந்த நபா் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் வீட்டின் அருகே வசித்து வருகிறாா். குழப்பத்தை விளைவிக்க அந்த நபரை முன்னாள் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தியூா் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணமே ராஜாகிருஷ்ணன்தான் என்றாா்.

மொடக்குறிச்சியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் சு.முத்துசாமி நடத்திவைத்தாா்

மொடக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி வரவேற்றாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வ... மேலும் பார்க்க

அந்தியூரில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 113 மூட்டை நிலக்கடலையை (ப... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டில் 20,626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்

பெருந்துறை சிப்காட்டில் 20, 626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா். சிப்காட் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மா... மேலும் பார்க்க

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது. அம்மன் அழைத்தலின்போது சேறுபூசியும், மாறுவேடமணிந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இக்கோயில் திருவிழா கடந்த ஜனவ... மேலும் பார்க்க

ஆயுதப் படை காவலா் தற்கொலை

ஈரோட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், வசந்தநடையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன்குமாா் (36). ஈரோடு மாவட்ட ஆயுதப் படை பிரிவில் ... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ஓஜாஸ் 2025’ என்ற தேசிய அ... மேலும் பார்க்க