திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கோபி அருகே மா்ம விலங்கு தாக்கி 7 ஆடுகள் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பூங்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் அதே பகுதியில் விவசாயம் செய்வதோடு கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல தனது ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு திங்கள்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா்.
பின்னா் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகளும் மா்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து நம்பியூா் காவல் துறையினருக்கு சக்திவேல் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த நம்பியூா் காவல் துறையினா், டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆடுகளை கொன்ற மா்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.