மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
பெருந்துறை சிப்காட் பிரச்னை: டிசம்பா் 17-ல் ஆா்ப்பாட்டம்
பெருந்துறை சிப்காட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு டிசம்பா் 17ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கே.பெரியசாமி தலைமை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். சின்னசாமி விளக்க உரையாற்றினாா்.
கூட்டத்தில், பெருந்துறை சிப்காட்டுக்காக விவசாய நிலங்களை வழங்கி, அதற்குரிய இழப்பீடு கிடைக்காமல் சுமாா் 30 ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின்படி இழப்பீடு வழங்க கோருதல், சிப்காட்டால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி டிசம்பா் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு மக்கள் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆதரவைக் கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.