செய்திகள் :

`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு

post image
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊர் உள்ளது. இந்த ஊரில், புராண இதிகாசங்களோடு தொடர்புடைய நூற்றாண்டு பழைமைவாய்ந்த நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது.

இந்தநிலையில், கோயிலில் உள்ள அம்மன் சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புராண கதையின்படி, "நல்லதங்காள் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். இவளுக்கு நல்லதம்பி எனும் அண்ணன் உண்டு. திருமணமான சில ஆண்டுகளிலேயே ஏழு குழந்தைகளுக்கு நல்லதங்காள் தாயாவாள். அடுத்தடுத்து பருவமழை பொய்த்துப்போகவும் விவசாயத்துக்கு வழியின்றி நல்லதங்காளின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிவிடும்.

இந்தநிலையில் கணவனும் நல்லதங்காளை விட்டு நீங்கவும், குடும்ப வறுமைக்காக தனது செல்வத்தை எல்லாம் நல்ல தங்காள் விற்றுத் தீர்ப்பார். முடிவில், வேறு வழியின்றித் தன் ஏழு குழந்தைகளுடன் தான் பிறந்த ஊரான அர்ச்சுனாபுரத்திற்கு திரும்பி வருவார். ஆனால் அங்கு அரண்மனைக்குள் நுழையவிடாமல் தனது அண்ணன் மனைவி, மூளியலங்காரி என்பவர், நல்ல தங்காளையும் அவளின் குழந்தைகளையும் விரட்டியடிப்பார்.

அம்மன் கோயில்

தொடர்ந்து அண்ணியின் சுடு சொல் தாளாமல் நாதியற்று எங்கே செல்வது என தெரியாமல் தவித்த நல்லதங்காளிடம் குழந்தைகள் பசிக்கு உணவு கேட்டு அல்லது அடம் பிடிக்கவும் கையில் பணம் இல்லாமல், குழந்தைகளின் பசியைப் போக்க வழிதெரியாமல் நல்லதங்காள் அழுது புலம்புவாள். அப்போது அங்கு பாழடைந்த கிணறு கண்ணில் தென்படவும், தனது ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வாள்.

கோவில்

இந்தநிலையில், காட்டுக்கு வேட்டையாட சென்ற நல்லதம்பி, தங்கையின் முடிவை அறிந்து கலங்கிப்போய் வீட்டுக்கு வந்ததும், தனது மனைவி மூளியலங்காரியை வெட்டிக் கொன்று விட்டு தங்கை தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வார். அண்ணன்-தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாய் ஊரறியப்பட்ட நல்லதம்பியும்- நல்லதங்காளும் சிவபெருமான் அருளால் பின்னாளில் தெய்வமாய் அறியப்பட்டனர் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. அதன்படி நல்லதங்காள் கோயிலும், அவர் தனது குழந்தைகளுடன்‌ தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் கிணறும் அர்ச்சுனாபுரத்தில் இன்றளவும் வழிபாட்டுத் தலமாக மக்கள் பூஜித்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் ஆனி மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். அர்ச்சுனாபுரம் கிராமக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலைச் சொந்தம் கொண்டாடுவதில், நல்லதங்காள் வழிவகைதாரர்களுக்கும், அர்ச்சுனாபுரம் ஊர் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கோயில் யாருக்கு சொந்தமானது என்பதை முடிவுசெய்ய கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தகர்ப்பு

இந்த வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில், நல்லதங்காள் கோயிலில் உள்ள அம்மன் சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதபடுத்தப்பட்டுள்ள சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அம்மன் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கோயிலில் மோப்பநாய், கைரேகை நிபுணர்களின் உதவியோடு குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸின் முயற்சி பலனளிக்கவில்லை. இந்தநிலையில் ஊரில் பதற்றத்தை தணிக்க அர்ச்சுனாபுரத்தில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அக்னி தீர்த்தம்: `உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா' -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் சிறை

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓ.பி.எஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக ... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட மூவர் கைது; சிக்கியது எப்படி?

வடசென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தன்னுடைய 12 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்... மேலும் பார்க்க

வேங்கை வயல்: ``சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது'' -மூவர் தரப்பில் மனுத்தாக்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

`டாக்டர், அரசு அதிகாரி..!’ - ஆசை வலை வீசி பல ஆண்களுடன் திருமணம்; சமூகவலைதள பதிவால் சிக்கிய பெண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனுக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த வாரம் முறைப்படி ... மேலும் பார்க்க

``வேலை இழந்து, திருமணம் ரத்தாகி..." -சைஃப் அலிகான் தாக்குதலில் சந்தேகத்தில் கைதானவர் வேதனை..

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த மாதம் அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு சைஃப் அலிகானை தாக்கிய நப... மேலும் பார்க்க