``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
கோயில் பூஜை தொடா்பாக பிரச்னை பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் கோயிலில் பூஜை வைப்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு தரப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருப்புக்குடிப்பட்டியில் உள்ள அய்யனாா் மற்றும் கருப்பா் கோயிலில் பூஜை வைப்பது தொடா்பாக ஒரே சமூகத்தைச் சோ்ந்த இருதரப்பினரிடையே பிரச்னை நிலவி வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முத்துக்காளை தரப்பினா் யாருக்கும் தெரியாமல் கோயிலில் பூஜைவைத்து வழிபட்டுள்ளனா். இதை கண்டித்து மற்றொரு தரப்பினரான கருப்பையா தரப்பினா் வேந்தன்பட்டி-கருப்புக்குடிப்பட்டி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா மற்றும் காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.