ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கோயில் மணிகளைத் திருடிய மூவா் கைது
தேனி மாவட்டம், கூடலூா் அருகே கோயில் மணிகளைத் திருடி விற்பனை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குள்ளப்பகவுண்டன்பட்டியில் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 36 செம்பு மணிகள் திருடு போனதாகக் கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் விசாரித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சிவநேசன் (27), அய்யங்காளை மகன் சிவா (30) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், திருடுய மணிகளை அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி இந்திராணியிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவநேசன், சிவா, இந்திராணி ஆகிய மூவரையும் கைது செய்தனா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா்.