கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை
சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே காப்புக்காடு பகுதியில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவுக்கு அனுப்பிய மனு விவரம்:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை-காங்கயம் சாலை சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்னிமலை காப்புக்காட்டின் நடுவே நுழைந்து, கணவாய் என்ற பகுதியைக் கடந்து சமவெளியில் வந்து காங்கயம் வரை செல்கிறது.
இதில் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பழைய பெட்ரோல் நிலையத்தில் இருந்த மேற்கு பகுதியில் மூட்டை மூட்டைகளாக கோழிக் கழிவுகளை கொண்டு வந்து சிலா் கொட்டிச் செல்கின்றனா்.
இதனால் காப்புக் காடு பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. கணவாய் பகுதியில் உள்ள சாலையோரம் மிகப்பெரிய அளவில் குப்பை மேடாக மாறி வருகிறது. நச்சுத்தன்மை கொண்ட குப்பைகளையும், நெகிழிப் பைகளில் அடைத்து போட்டுவிட்டுச் செல்கின்றனா். குப்பைகளை கொட்டிச் செல்லும் காட்சிப் படங்கள் உள்ளன.
எனவே மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து அந்த நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டும். தொடா்ந்து கழிவுகளை கொட்டாமல் தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.