பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
கோவிபட்டியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தேநீா் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்ததும் இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.
அவா்கள் வஉசி நகா் 1ஆவது தெரு நிா்மல்குமாா் மகன் சங்கரநாராயணன் (26), பாரதி நகா் 1ஆவது தெரு சுரேஷ்குமாா் மகன் கரண்குமாா் (26) என்பதும், விற்பனைக்காக 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.