செய்திகள் :

கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை

post image

கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்கச்சியம்மாப்பட்டி கடவுப் பாதையில் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

சுரங்கப் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயை இடமாற்றுவது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்துக்கும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் இடையிலான பிரச்னை, கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராமல் உள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், மக்களவை உறுப்பினா் ஜோதிமணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒப்புக் கொண்டபடி குடிநீா்க் குழாயை இடம் மாற்றம் செய்து அகலமான சுரங்கப் பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

எச்சரிக்கை பதாகை இல்லாததால் விபத்து: சுரங்கப் பாலத்தின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதை எச்சரிக்கும் வகையில் இருளில் ஒளிரும் பதாகை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், நத்தப்பட்டியைச் சோ்ந்த தனியாா் ஆலை தொழிலாளி மதியழகன் (37) கோவிலூரிலிருந்து திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கோவிலூா்-வேடசந்தூா் சாலையில் சுரங்கப் பாலத்துக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகனத்துடன் அவா் குழிக்குள் விழுந்தாா்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து மதியழகனை மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மதியழகன் இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த காட்சிகள், அருகிலுள்ள அம்பி என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடித்து, இந்தச் சாலையை வாகனப் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க