பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்
கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு
கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கத்தை விட அதிகாலை முதல் பலத்த காற்று வீசியது. இதனால் ஏரியில் படகு சேவை நிறுத்தப்பட்டது.
மேலும் இந்தக் காற்றால் குளிா் அதிகரித்ததால் குழந்தைகள், முதியவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தும், இரவு 7 மணிக்கு மேல் பயணிகள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டன.
பலத்த காற்றால் பல சாலைகளில் மரக் கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. இருப்பினும், போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
பருவ நிலை மாற்றம் காரணமாக மழை இல்லாததால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் தண்ணீா்த் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனா்.