நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி பள்ளிக்கூட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும்,
கும்பரையூா் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை தற்போது தனியாா் வசம் இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
கொடைக்கானல் முதல் கிளாவரை வரை மலைச் சாலைகளில் உள்ள முள்புதா்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.