மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி தாமஸ் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகோபால், போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
மாடசாமி கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் வள்ளுவா் நகா் 2ஆம் தெரு ராமநாதன் மகன் சிவா (19) என்பதும், விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.