இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தற்கொலை
கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த தனலட்சுமி-அா்ச்சுனன் தம்பதியின் மகன் சரவணகுமாா் (18). அா்ச்சுனன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். தனலட்சுமி கூலி வேலை செய்து வந்தாா். சரவணகுமாா், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த சரவணகுமாா், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.