அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்ப...
கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க விழா
கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க 8ஆம் ஆண்டு தொடக்க விழா, கராத்தே செல்வின் நினைவேந்தல் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இயக்கத் தலைவா் சீனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பாசில் (திருநெல்வேலி), விஜயவிக்னேஷ் (தூத்துக்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிச்செல்வம் பங்கேற்று, முன்னாள் எம்எல்ஏ பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டியன், கராத்தே செல்வின் ஆகியோரின் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, கராத்தே செல்வின் குறித்த பாடலை நாடாா் உறவின் முறைச்சங்க தலைவா், பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா ஆகியோா் வெளியிட்டனா். பாடலாசிரியா் புண்ணியா, வடசென்னை மாவட்டச் செயலா் பாலா, பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலா் தினேஷ் லிங்கம், வீர சான்றோா் கிராமணியாா் பேரவை பொதுச் செயலா் குணா, தொழிலதிபா்கள் பாஸ்கா், கந்தசாமி ஆகியோா் பேசினா்.
முன்னதாக, திலகபாமா தலைமையில் பாண்டியனாா் மக்கள் இயக்கத்தினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் விக்னேஷ் காா்த்திக் வரவேற்றாா். கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ஸ்டெபின் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, நகர, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.