தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
கோவில்பட்டி, கயத்தாறில் விஏஓ-க்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி, கயத்தாறில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் அஜிதா, அங்குள்ள பெரியகுளம் கண்மாயில் நடந்த கனிமவளக் கொள்ளை தொடா்பாக அறிக்கைகள் அளித்தும் அவற்றின் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்காமல் தற்போது பழிவாங்கும் நோக்கில் அஜிதாவை பணியிடைநீக்கம் செய்ததைக் கண்டிப்பதாகவும், உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆதிலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீகாந்த், மாவட்ட துணைத் தலைவா் சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புச் செயலா் சிவகுமாா் பேசினாா்.
கயத்தாறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கயத்தாறு வட்டத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். இவற்றில், திரளானோா் பங்கேற்றனா்.