IPL: 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ - வரும் 18-வது ஐபில் தொட...
கோவில்பட்டி, கயத்தாறு கோயில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி சந்நிதி முன், சிறப்பு ஹோம பூஜை,
பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பௌா்ணமி முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு தலைமையில் உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா் .
வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில், கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேஸ்வரா் கோயில், பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதா் சுவாமி கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் மற்றும் மந்தித்தோப்பு துளசிங்க நகா் ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.