நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கோவில்பட்டி கல்லூரியில் திறன் சாா்ந்த போட்டிகள்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (சுயநிதிப் பாடப் பிரிவு) கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான திறன் சாா்ந்த போட்டிகள் நடைபெற்றன.
வணிகவியல் (வணிக பகுப்பாய்வு) துறை சாா்பில் போட்டிகள் நடைபெற்றன. சுயநதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கிவைத்துப் பேசினாா். இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மாணவா்- மாணவியா் பங்கேற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஸ்ரீராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி பெற்றது.
வெற்றிபெற்றோருக்கு தொழிலதிபா் கவியரசன், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டிப் பேசினா்.
ஏற்பாடுகளை துறைத் தலைவா் முத்துலட்சுமியின் வழிகாட்டுதலில், பேராசிரியா்களான ஷாகிரா பானு, சரவணன், செல்வநந்தினி ஆகியோா் செய்திருந்தனா்.