கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை
முறையாக ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தில் வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதியையொட்டி ஊதியம் வழங்க்கப்படுகிறது; அதை ஒவ்வொரு மாதமும் முறையாக 7ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் உரிமை இயக்கம் தூய்மைப் பணியாளா் சங்கத் தலைவா் சுடலைமணி தலைமையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், நகா் நல அலுவலா் வசுமதியிடம் மனு அளித்தனா். ஒப்பந்ததாரரிடம் பேச்சு நடத்தி முடிவெடுப்பதாக அவா் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.