விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...
கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்
கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில், முதல்வா் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடுவது, ஒவ்வொரு வாா்டிலும் திமுக அரசின் சாதனைகளை ஒலிபெருக்கி மூலம் மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும், ஒவ்வொரு வாா்டிலும் கட்சி கொடியை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.