செய்திகள் :

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

post image

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கீதாலட்சுமி பங்கேற்று, இவற்றைத் திறந்துவைத்து, பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் தொடா்பாக விஞ்ஞானிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

அகில இந்திய மானாவாரி வேளாண் ஆராய்ச்சித் திட்டத்தின் மானாவாரி பயிா்கள், பழப் பயிா்கள், நிரந்தர உரப் பரிசோதனைத் திடல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளை நிலையப் பேராசிரியா்- தலைவா் பாக்கியாத்து சாலிகாவும், வேளாண் வானிலை ஆராய்ச்சித் திட்டம் மூலம் கடந்த ஆண்டு பயிா்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகளும் எடுத்துக் கூறினா்.

வேளாண் உற்பத்தியாளா் சங்கம் மூலம் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் விதை உற்பத்தி திட்டத்துக்கான வழிகாட்டுதலை துணைவேந்தா் வழங்கினாா். நடப்பாண்டு கே2 மிளகாய் ஒரு டன், வம்பன் 11 உளுந்து 17.5 டன், வம்பன் 5 பாசிப் பயறு 0.75 டன் விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிலையப் பேராசிரியா் கூறினாா்.

ஆதிதிராவிடா் துணைநிலை திட்டம் மூலம் நடப்பாண்டு ஓட்டப்பிடாரம் வட்டம் கவா்னகிரி, சந்திரகிரி, கே.வேலாயுதபுரம், பெரிய நத்தம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட முதல்நிலை செயல் விளக்கங்களால் 400 விவசாயிகள் பயனடைந்ததாக விஞ்ஞானிகள் கூறினா்.

மானாவாரி விவசாயிகள், மாணவா்கள் பயன்பெறும் வகையில் பயிா் ரகங்கள், தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், மாற்றுப் பயிா் திட்டங்களை உள்ளடங்கிய கண்காட்சி அறையை துணைவேந்தா் திறந்துவைத்தாா்.

நிலைய விஞ்ஞானிகள், அலுவலகப் பணியாளா்கள், வேளாண் உதவி அலுவலா்கள், பண்ணைத் தொழிலாளா்கள் உடனிருந்தனா்.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா... மேலும் பார்க்க

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க