செய்திகள் :

கோவையில் பரவலாக பெய்த மழை

post image

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் வரையிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

மாநகரில் பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், உக்கடம், கணபதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீரென வீசிய பலத்த காற்றில் சில இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து விழுந்தன.

சிங்காநல்லூா் நஞ்சப்பா நகரில் மழையின்போது மரம் முறிந்து மின் வயா் மீது விழுந்ததால், சேதமடைந்திருந்த ஒரு மின்கம்பம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின் கம்பம், மரங்களை அகற்றினா். இதனால் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

அடுத்த சில நாள்களுக்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அவை மழை மேகங்களாக உருவாகி, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி, அதையொட்டிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க

பிஎஸ்ஜி கல்லூரியில் தென்னிந்திய குறும்படத் திருவிழா

கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது தென்னிந்திய குறும்படத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவை கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா துறை நட... மேலும் பார்க்க