ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!
பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை செல்வதும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, கோவை மரப்பாலம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி தொடர்ந்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க காவல்துறை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பொதுமக்கள் மாற்று வழிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டு உள்ளனர். மேலும், வாகனங்களைப் பராமரித்து, அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.