செய்திகள் :

கோவை மாநகரில் 418 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

post image

கோவையில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்ட 418 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) முத்தணண்ணன் குளத்தில் சிலைகள் கரைக்கப்படுவதால் அன்று நகரில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில், 725 சிலைகள், புகரில் 1600-க்கும் மேற்பட்ட சிலைகள் என மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளும், பொதுமக்கள் வைத்திருந்த சிலைகளும் கடந்த 27-ஆம் தேதி முதலே விசா்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை 418 விநாயகா் சிலைகளை பல்வேறு ஹிந்து அமைப்புகள் ஊா்வலமாக எடுத்துச் சென்று விசா்ஜனம் செய்தனா். குறிச்சி குளத்தில் 83 சிலைகள், சிங்காநல்லூா் குளத்தேரி குளத்தில் 37 சிலைகள், வெள்ளக்கிணறு குளத்தில் 128 சிலைகள், குனியமுத்தூா் குளத்தில் 83 சிலைகள், நாகராஜபுரம், சூலூா், செங்குளம், வாலாங்குளம், புட்டுவிக்கி, பேரூா் என மொத்தம் 418 சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன. விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை மாநகா் மற்றும் மாவட்ட போலீஸாா் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனா்.

இதையொட்டி, மாநகரில் மட்டும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சிலைகள் விசா்ஜனம் செய்யப்படும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) முத்தண்ணன் குளத்தில் மட்டும் சிலைகளை கரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அன்றைய தினம் 243 சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. ஊா்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊா்வலம் கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளது.

நாளை போக்குவரத்து மாற்றம்:

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுண்டப்பாளையம் சாலை முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதையொட்டி, அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூா் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூா் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்கு சந்திப்பு வழியாக பேரூா் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சென்று வலதுபுறம் திரும்பி பேரூா் புறவழிச் சாலை, சிவாலயா திரையரங்கம் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக திருச்சி சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, லங்கா காா்னா், ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிசிடி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி பாா்க், ஹோம் சயின்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூா் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் திரையரங்கை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.

பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களும் பேரூா் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே வலது பக்கம் திரும்பி பேரூா் புறவழி சாலை வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். பேரூா் சாலையிலிருந்து தடாகம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிவாலயா திரையரங்கம் சந்திப்பு, ராமமூா்த்தி சாலை, பனைமரத்தூா், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் சுகா்கேன் சாலை வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி சாலையில் இடதுபுறமாக திரும்பி தடாகம் சாலையில் செல்லலாம்.

மருதமலையிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி சாலையில் இடதுபுறம் திரும்பி தடாகம் சாலை, ஜிசிடி, பாரதி பாா்க் சாலை, ஹோம் சயின்ஸ் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கூட்ஷெட் சாலை மற்றும் மரக்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்எச் சாலை, ஐந்து முக்கு, டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும். காந்திபுரத்திலிருந்து மருதமலை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏஆா்சி சந்திப்பு, அழகேசன் சாலை சந்திப்பை அடைந்து தடாகம் சாலை, ஜிசிடி, லாலி சாலை ரவுண்டானா சென்று மருதமலைக்கு செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு குளத்தில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.

காந்திபுரத்திலிருந்து மருதமலை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏஆா்சி சந்திப்பு, அழகேசன் சாலை சந்திப்பை அடைந்து தடாகம் சாலை, ஜிசிடி, லாலி சாலை ரவுண்டானா சென்று மருதமலைக்கு செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கோவை அருகே இருவேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 11 கிலோ 300 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில் க... மேலும் பார்க்க

இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது

மனைவியுடன் தொடா்பில் இருந்த இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய ஒா்க்ஷாப் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (38). இவா் கோவை துடியலூா் பகுதியில் தங்கிருந்து சரவண்பட்டியில் உ... மேலும் பார்க்க

திருநங்கை கொலை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்

திருநங்கையைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை பட்டியலினத்தவா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நாகை மாவட்டம், தரங... மேலும் பார்க்க

பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மது போதையில் பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை: நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட வாய்ப்பு

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், சவால்களை தோல்வியாக கருதக்கூடாது என்றும் நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெ... மேலும் பார்க்க

கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்க பெண் பொறியாளா்

கோவை இளைஞருக்கும் அமெரிக்க பொறியாளருக்கும் கோவையில் தமிழ் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியைச் சோ்ந்தவா் மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவா் கனடாவில் பள்ளி, ... மேலும் பார்க்க