இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநங்கை கொலை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்
திருநங்கையைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை பட்டியலினத்தவா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி மேமாத்தூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (29). இவா் கோவை சாய்பாபா காலனி பகுதியில் திருநங்கையான சங்கீதா நடத்தி வந்த உணவகத்தில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த 21.10.2020-இல் சங்கீதாவை அவா் பாலியல்ரீதியாத துன்புறுத்தினாா். இதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதுதொடா்பான தகராறில் சங்கீதாவை அவா் கத்தியால் குத்திக் கொலை செய்தாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை பட்டியலினத்தவா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.