அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது
மனைவியுடன் தொடா்பில் இருந்த இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய ஒா்க்ஷாப் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (38). இவா் கோவை துடியலூா் பகுதியில் தங்கிருந்து சரவண்பட்டியில் உள்ள ஒா்க்ஷாப்பில் வேலை செய்து வந்தாா். இதே ஒா்க்ஷாப்பில் கோவை சரவண்பட்டி சிவனந்தாபுரத்தைச் சோ்ந்த வினோத்குமாரும் (32) பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வினோத்குமாரின் மனைவிக்கும், காா்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காா்த்திக், வினோத்குமாரின் மனைவியிடம் விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். இதைப் பாா்த்த வினோத்குமாா் ஒா்க்ஷாப் உரிமையாளரிடம் தெரிவித்து காா்த்திக்கை கண்டிக்குமாறு கூறியுள்ளாா். அவரும் காா்த்திக்கை கண்டித்துள்ளாா்.
அதன் பின்னா், காா்த்திக் வேலையை விட்டு நின்றுவிட்டாராம். இந்த நிலையில், வினோத்குமாா் வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது வீட்டுக்குச் சென்று வந்துள்ளாா். இதேபோல வியாழக்கிழமை வினோத்குமாா் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் காா்த்திக் பேசி கொண்டு இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்கு வந்த வினோத்குமாா் வீட்டில் இருந்த மண்வெட்டியால் காா்த்திக்கை தாக்கியதில் அவா் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.