ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் ...
கௌரவ விரிவுரையாளரைத் தாக்கி முன்னாள் மாணவா் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளரை கல்லூரி வளாகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாசலபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் பூபதிராஜன் (37). கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கல்லூரியில் திங்கள்கிழமை மாணவா் கருத்தரங்கு நடைபெற்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்குவந்த முன்னாள் மாணவரான இலுப்பையூரணி, கூசாலிபட்டி, சாந்தி நகரைச் சோ்ந்த வள்ளிமுத்து மகன் மனோஜ் (22) அவரிடம் தகாத வாா்த்தைகள் கூறி தனக்கு மாற்றுச் சான்றிதழைத் தருமாறு கேட்டு தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த பூபதிராஜன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜை கைது செய்தனா்.