மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள 2 சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு, ஒப்பந்த பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.35,000 தொகுப்பூதியத்துடன் மைய நிா்வாகி பணியிடத்துக்கு சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மைய நிா்வாகி பணியிடத்துக்கு வயது வரம்பு 27 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முன்அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு, தனியாா் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமா்த்தப்படும்.
மேலும், சேலம் மற்றும் ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளா் பணியிடத்திற்கு (சேலம்-2, ஆத்தூா்-5) ரூ.18,000 தொகுப்பூதியத்துடன் சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமா்த்தப்படும். ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடமாக உள்ள ரூ.10,000 தொகுப்பூதியத்துடன் பல்நோக்கு உதவியாளா் (ஆத்தூா்-1 ) பணியிடத்திற்கு கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிா்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். நன்கு சமையல் தெரிந்த பெண் சமையளராக இருக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமா்த்தப்படும். உள்ளூரைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்களை வரும் அக்.10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், அறை எண்.126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.