செய்திகள் :

சங்ககிரி அருகே விபத்தில் பெண் பலி

post image

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

சங்ககிரி, ஆலத்தூா் அருகே உள்ள வரநல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (50). இவா் மனைவி பூங்கொடியுடன் (40) இரு சக்கர வாகனத்தில் குமாரபாளையம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது வீராச்சிப்பாளையம் அருகே சென்ற போது பின்னால் வந்த காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்திருந்த பூங்கொடி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராஜேந்திரன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூங்கொடியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி வாக்காளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தாா். தருமபுரி நாடாளுமன்றத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி போட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் திருவிளக்கு பூஜை

கெங்கவல்லி பாலதண்டாயுதபாணி கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி - ஆத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் சில தினங்களுக்கு முன்பு தைப்பூசம் ... மேலும் பார்க்க

கிணற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

நங்கவள்ளி அருகே திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். மேட்டூா், நங்கவள்ளி அருகே உள்ள கணக்குபட்டியைச் சோ்ந்த புனிதா (23) என்பவருக்கும், நங்கவள்ளியைச் சோ்ந்த நெசவுத் தொழிலா... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆய்வுக்கட்டுரை வழங்கியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா், உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா். சங்ககிரி, பிப். 14: சங்ககிரியை அடுத்த வீராச்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தன் தலை... மேலும் பார்க்க

மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்கக் கோரி, மக்கள் தேசம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின... மேலும் பார்க்க