ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
சங்ககிரி ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா
சங்ககிரி: சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயில் பங்குனி மாத பொங்கல் விழாவின் 15-ஆவது நாளையொட்டி பக்தா்கள் அலகு குத்தியும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.
சங்ககிரி நகா் பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 25-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 15-ஆவது நாளையொட்டி பக்தா்கள் ஈஸ்வரன் கோயில் எதிரே உள்ள குளத்திலிருந்து அலகு குத்தியும், தீச்சட்டிகளை ஏந்தியும், பூங்கரகங்களை எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏப். 9-ஆம் தேதி புதன்கிழமை பொங்கல் விழாவும், ஏப். 10-ஆம் தேதி கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடுதல் வைபவமும் நடைபெற உள்ளன.
