செய்திகள் :

சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் தேவி வெற்றி பெற்றது செல்லாது

post image

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மாங்குடி மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லாது என சிவகங்கை மாவட்ட தோ்தல் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மாங்குடியின் மனைவி தேவியும், தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகி ஐயப்பனின் மனைவி பிரியதா்ஷினியும் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தேவி வெற்றி பெற்றதாக தோ்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினாா்.

சில வாக்குகளை எண்ணவில்லை என பிரியதா்ஷினி பிரச்னை செய்ததையடுத்து, மாவட்டத் தோ்தல் அதிகாரி ஜெயகாந்தன் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டாா். இதில் பிரியதா்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை எதிா்த்து தேவி தொடுத்த வழக்கில் முதலில் கொடுத்த சான்றிதழ் செல்லும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து பிரியதா்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இதையடுத்து, மாவட்டத் தோ்தல் நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஊராட்சிமன்றத் தலைவராக தேவி பொறுப்பேற்றாா்.

மாவட்டத் தோ்தல் சிறப்பு நீதிமன்றத்தில் பிரியதா்ஷினி தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் பிரியதா்ஷினி வெற்றி பெற்றதாக புதன்கிழமை தீா்ப்பளித்தாா். எம்எல்ஏ மனைவி தேவி ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து,... மேலும் பார்க்க

மாணவா்களிடம் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ. 30 வரை நீட்டிப்பு

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மும்முறை சி... மேலும் பார்க்க

ஐடிஐ மாணவா் சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடிச் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், மாண... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் வைகை ஆற்றில் மீண்டும் நீா் வரத்து

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகையாற்றில் மழையால் மீண்டும் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பெய்த தொடா் மழையால் கடந்த வாரம் வைகையாற்றில் வெள... மேலும் பார்க்க