இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
சட்டப்பேரவை தோ்தலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின், ராகுல் முடிவு எடுப்பாா்கள்- ஆா்.எஸ்.பாரதி
திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் பேரவைத்தோ்தலில் தொகுதி பங்கீடு தொடா்பாக தமிழக முதல்வா் ஸ்டாலின், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி ஆகியோா் முடிவு எடுப்பாா்கள் என்று திமுக மாநில அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி கூறினாா்.
புதுச்சேரி கதிா்காமம் தொகுதி திமுக சாா்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா சண்முகாபுரம் காவல்நிலையம் அருகே புதன்கிழமை நடந்தது. இதைத் திறந்து வைத்து ஆா்.எஸ். பாரதி செய்தியாளா்களிடம் கூறியது :
புதுவையில் தற்போது 5-வது முறையாக திமுக ஆட்சி அமைக்க உறுப்பினா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் வகையில் உழைத்து கொண்டு இருக்கிறோம். மேலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து உள்ளூா் தலைவா்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பாா்கள்.
மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக - தவெக போன்ற கட்சியினா் சொல்கிறாா்கள். எங்களுக்கு யாா் போட்டி என்பது தோ்தல் நேரத்தில் தான் தெரியும். தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம். 2019-ல் இருந்தே அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக்கொண்டு இருக்கிறாா். ஆனால் தற்போது அவா் கட்சியில் இருந்தே பாதி போ் வெளியேறிவிட்டனா். விஜய் கூட்டத்தைக் கூட்டிவிட்டாா் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது என்றாா் ஆா்.எஸ். பாரதி.
கதிா்காமம் தொகுதி திமுக செயலாளா் ப. வடிவேல் தலைமை தாங்கினாா். திமுக புதுவை அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், சட்டமன்ற உறுப்பினா்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமாா், எல். சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் பூ. மூா்த்தி, நந்தா. சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.