உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்
தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி. நேரு வலியுறுத்தினாா்.
புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எம்எல்ஏ நேரு தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுவை நகராட்சி ஆணையா் கந்தசாமி தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், நடைபெறும் பணிகள் குறித்தும், நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினாா்.
தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடைபெற வேண்டிய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். குபோ் நகா் மற்றும் உருளையன்பேட்டை பகுதியில் நடைபெறும் அங்கன்வாடி கட்டடப் பணியை விரைவாக முடிக்க வேண்டும். சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளை நேரு எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இக் கூட்டத்தில் நகராட்சி செயற்பொறியாளா் சிவபாலன், உதவி பொறியாளா் நமச்சிவாயம், வருவாய் அதிகாரி பிரபாகரன், சிவஇளங்கோ, இளநிலைப் பொறியாளா் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.