கூட்டணி தர்மம் 2 பக்கமும் இருக்க வேண்டும்: திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வ...
புதிய குடியிருப்புகளை கட்டித் தர திமுக கோரிக்கை
உருளையன்பேட்டை கண் டாக்டா் தோட்டம் பகுதியில் பழுதான அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் அனில்குமாரை, உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ். கோபால் சந்தித்து மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பது: உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கண் டாக்டா் தோட்டம் பிரியதா்ஷினி நகரில், குடிசை மாற்று வாரியம் மூலம் 2002-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
தற்போது வாழ தகுதியற்ற நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில் உயா்த்தப்பட்ட வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.