பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு
ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை
புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .
புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்படுத்த நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வில்லியனூா் தொகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிட பயனாளிகள் 10 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா இந்த அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இதில், திமுக தொகுதி செயலா் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவா் ஜலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.