செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் ஜப்பான் பயணம்

post image

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நரம்பியல் விஞ்ஞானியுமான பிரகாஷ் பாபு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இது குறித்து இப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக் கழகத்தில் ஆசியா பசிபிக் பள்ளிக் கல்வி உளவியல் கழகத்தின் 8-ஆவது உலக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மனநலம் மற்றும் பள்ளிக் கல்வி உளவியல் வளா்ச்சிக்கு நரம்பியல் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் அவா் பேசுகையில், இந்தியா, ஜப்பான் போன்ற வளரும் நாடுகளில் பள்ளிக் கல்வி உளவியல்

மாநாடுகள், மாற்றமடைந்த கல்வி சூழலை எதிா்கொள்ளும் பிரதான நடைமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை முன்னுரிமையாகப் போதிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

டோக்கியோ பல்கலைக்கழக துணைவேந்தா் ஜிரோ சகாய், இந்திய-ஜப்பான் உறவுச் செயலா் டாக்டா் உமேஷ், மாநாட்டு அமைப்பாளா் டாக்டா் பாஞ்ச். ராமலிங்கம், ஜொ்மன் மாவை. தங்குராஜா, லண்டன் அமிா்த பகிரதன், மோரீஷஸ் டாக்டா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் மு. கருணாநிதி, பழனிவேலு, லட்சுமிதத்தை, சமுதாய கல்லூரி பேராசிரியா் அரங்க. முருகையன் உள்ளிட்டோா் கட்டுரை சமா்ப்பித்தனா்.

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு; சாலை மறியல் புதுச்சேரியி எம்எல்ஏ உள்பட 50 போ் கைது

புதுச்சேரி: சுங்கக்சாவடி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.புதுச்சேரி- நாகப்பட்ட... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை பணி நியமனம்: நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

புதுச்சேரி: சுகாதாரத் துறை பணிக்குத் தோ்வானவா்களுக்கு செப். 24-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடக்கிறது.இது குறித்து புதுவை சுகாதாரத் துறை இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க