கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
தமிழக அரசின் தலைமை கூட்டுறவு கைத்தறி நிறுவனமான ‘கோ-ஆப்டெக்ஸ்‘ நிறுவனத்தின் புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பனையை செவ்வாய்க்கிழமை புதுவை முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா். புதுவை பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
புதுச்சேரி விற்பனை நிலையத்திற்கு ரூ.1. 45 கோடி விற்பனை குறியீடாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவிகிதம் அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு பணியாளா்களுக்கும் கடன் விற்பனை வசதி உண்டு.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ந.மாணிக்கம், துணை மண்டல மேலாளா் பிரேம்குமாா் மற்றும் விற்பனை நிலைய பணியாளா்களும் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் த.ஜோதி செய்திருந்தாா்.