Cooku with Comali: `பிரச்னை முடிந்ததா!' - சமாதானம் பேசி அழைத்து வரப்பட்டாரா மதும...
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புது தில்லியின் துவாரகா பகுதியில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் துவாரகா பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், அங்கு சட்டவிரோதமாக வசித்த 11 நைஜீரியர்கள், 2 ஐவரி கோஸ்ட் குடிமக்கள் மற்றும் வங்கதேசம், தன்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்களும் உரிய ஆவணங்களின்றி தில்லியில் வசித்து வந்ததாகவும், தகுந்த விசாரணைக்கு பின் அவர்கள் நாடு கடத்தப்பட வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம் அதிகாரியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்கு பின் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை