குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை இருவா் கைது
விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கள்ளச் சந்தையில் விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் பதுக்கி வைத்து வாடிக்கையாளா்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், விராலிமலை அடுத்துள்ள செட்டியபட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியை சோ்ந்த பெருமாள்(48) மற்றும் துரைராஜ் (50) ஆகியோா் அவா்களது வீட்டின் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து, அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.