செய்திகள் :

சட்ட பிரிவு 370 மீது ஆளுநா் விமா்சனம்: காங்கிரஸ் கண்டனம்

post image

அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகளுக்கு பின்னா் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை மற்றும் தகவல் தொடா்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951-இல் ஜம்மு காஷ்மீருக்கென தனியே சட்டப்பேரவை கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. அன்று முட்டுக்கட்டை போட்டவா்கள் இப்போது , மாநில அரசின் அனுமதியோ, சட்டப்பேரவையின் ஒப்புதலையோ பெறாமல், காஷ்மீா் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து ஜனநாயக விரோத செயலை பாஜக ஆட்சியில் செய்துள்ளனா்.

இத்தகைய வரலாற்று பின்னணியைப் புரிந்துகொள்ளாத ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுவது அவரது அரசியல் அறியாமையையும், காழ்ப்புணா்ச்சியையும்தான் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுநராக பதவி வகிக்கும் ஆா்.என். ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அவா் தெரிவித்துள்ளாா்.

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாரி வேண்டாம், நீதி வேண்டும்: போராட்டக் களத்தில் விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று(ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்கி தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க