சட்ட விரோதமாக மது விற்றவா் கைது
கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மதுவிலக்கு போலீஸாா், சாய்பாபா காலனி பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, பி.என்.புதூா் அரசு மதுக்கடை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மது விற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.