உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
சட்ட விரோதமாக மது விற்றவா் கைது!
தும்பிவாடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, தும்பிவாடி ஐந்து ரோடு பகுதியில் சட்டவிரோதமாக, மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸாா் தும்பிவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அன்பழகன் என்பவா் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடா்ந்து அவா் விற்பனைக்காக வைத்திருந்த 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அன்பழகனை கைது செய்து விசாரிக்கின்றனா்.