செய்திகள் :

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

post image

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வத்திராயிருப்பு தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வழுக்கு பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, மலட்டாறு, காராம்பசுதடம், பச்சரிசிப் பாறை வழியாக 7 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பக்தா்கள் குளித்து விட்டு கோயிலுக்குச் செல்வா். மலையேறும் பக்தா்களுக்காக மலைப் பாதையில் 5 இடங்களில் நிரந்தரக் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புகழ் பெற்ற ஆடி அமாவாசை திருவிழா வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகிற 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் 5 லட்சம் பக்தா்கள் வருவா் என்பதால் மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகள் நீரின்றி வடு காணப்படுகின்றன. இதனால், ஆடி அமாவாசைக்கு வரும் பக்தா்கள் நீரின்றி சிரமப்பட வாய்ப்பு உள்ளதால் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வழக்கத்தை விட கூடுதலான குடிநீா்த் , தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்... மேலும் பார்க்க